'அப்படித்தாண்டா பேசுவேன்': சேரனிடம் காரசாரமாக மோதும் சரவணன்!

நேற்று வரை கவின், சாக்சி, லாஸ்லியா மோதல் நடந்து வந்த நிலையில் இன்று புதியதாக சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் இருந்தே சேரனுக்கும், சரவணனுக்கும் பிடிக்காத நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து வந்தனர். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் மறைமுகமாக தாக்கி வந்த நிலையில் இன்று நேரடியாகவே இருவரும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாரத்து டாஸ்க்கில் யார் நன்றாக விளையாடியது என்பது குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் சரவணனின் விஜயகாந்த் கெட்டப் குறித்து சேரன் விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடியாக சரவணனும், ரஜினியின் கெட்டப்பை சேரன் காமெடியாக்கியதை சுட்டிக்காட்டினார். ஒரு கட்டத்தில் 'அப்படித்தாண்டா சொல்லுவேன்' என்று கூட சொல்வேன் என்று சரவணன் சேரனை நோக்கி கூற, சேரன் உள்பட சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் சேரனும் சரவணனும் மட்டுமே சீனியர்கள். மற்றவர்கள் சண்டை போடும்போது இருவரும்  விலக்கி வைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவருமே மோதிக்கொள்வதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வாரம் இதுகுறித்து கமல் முன்னிலையில் பஞ்சாயத்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.