லாஸ்லியாவை எச்சரித்த பிக்பாஸ்! கலாய்த்த ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் விதிகளை சரியாக கடைபிடிக்கின்றார்களா? என்றால் அது இல்லை என்றுதான் கூற வேண்டும். மைக்கை ஆஃப் செய்வது முதல் பல விதிமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் விதிகளை யார் சரியாக கடைபிடிக்கின்றார்கள்? என்பது குறித்த டாஸ்க் நடக்கின்றது

அதில் பேசிய லாஸ்லியா, 'எல்லோரும் சரியாக விதிகளை பின்பற்ற வேண்டும். கவின் மைக்கை சரியாக மாட்ட வேண்டும். பிக்பாஸ் விதிகளை சரியாக கடைபிடிப்பது நான் தான். பிக்பாஸ் என்னை ஒருமுறை கூட மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று சொன்னதில்லை' என்று லாஸ்லியா கூற, அவர் கூறிய அடுத்த நிமிடமே பிக்பாஸ், லாஸ்லியாவிடம் மைக்கை சரியாக மாட்டுங்கள்' என்று கூற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவரை கலாய்த்தனர். இதனால் லாஸ்லியா தர்ம்சங்கடமாக நெளிந்தார்

லாஸ்லியா பேசும்போது இடையிடையே சாண்டியும் தர்ஷனும் கலாய்க்க, கவின் அவர் பேசுவதை சீரியஸாகவே எடுத்து கொண்டது போல் தெரிகிறது. மொத்தத்தில் லாஸ்லியாவை வைத்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் காமெடி செய்து வருகின்றனர்