தர்ஷனை நெகிழ வைத்த ஆடியன்ஸ்: பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்ற அறிவிப்பை கமல் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸ்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறுபவர்கள் ஒருவர் தர்ஷன் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அவர் வெளியேற்றப்படுவதை ஜீரணித்துக் கொள்ளவே ஆடியன்ஸ்களால் முடியவில்லை. குறிப்பாக பெண்கள் ஆடியன்ஸ்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி நெகிழ வைக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை சந்திக்க தர்ஷன் அரங்கத்திற்கு வந்த போது பலத்த கரகோஷத்தை ஆடியன்ஸ்கள் எழுப்பினர். மேலும் ஆடியன்ஸ்கள் பலர் எழுந்து நின்று ’தர்ஷன் தர்ஷன்’ என்று கோஷமிட்டனர். பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் வெளியேறும் போது இவ்வாறு கோஷம் போடுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தனக்கு கிடைத்த பெரும் வரவேற்பை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த தர்ஷன் ஆடியன்ஸுக்கு நன்றி கூறிக் கொண்டார். இதைவிட பெரிய சந்தோஷம் தனக்கு இல்லை என்றும், பிக்பாஸ் டைட்டிலையே வெற்றி பெற்றது போன்ற ஒரு உணர்வு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் இதை நீங்கள் தோல்வியாக கருத வேண்டாம் என்றும் இதுவே உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியின் முதல்படி என்றும் இன்னும் நீங்கள் பல வெற்றிகளை பார்க்கப் போகிறீர்கள் என்று கமலஹாசன் தர்ஷனுக்கு நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தர்ஷனின் வெளியேற்றத்தை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால் மக்களின் முடிவு இவ்வாறு இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் என்றும் கமல் வருத்தத்துடன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com