வனிதாவை அடுத்து குறிவைக்கப்படும் மீரா: இந்த வார நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று வெளியேற்றும் படலமும், திங்களன்று நாமினேஷன் படலமும் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறப்போகும் போட்டியாளர்கள் குறித்த நாமினேஷன் படலம் இன்று நடந்தது.

இதுகுறித்த புரமோ வீடியோவில், 'மீராவை லாஸ்லியாவும், சரவணனை மோகன் வைத்யாயும், மோகன் வைத்யாவை சரவணனும், தர்ஷனை மீராவும், மீராவை சேரனும், மீராவை தர்ஷனும், சரவணனையும் மீராவையும் ஷெரினும், அபிராமியை சாக்சியும் நாமினேட் செய்துள்ளனர். வழக்கம்போல் சாண்டியை யாரும் நாமினேட் செய்யவில்லை. கவின், மதுமிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்களா? என்பது நிகழ்ச்சியின் முழு வடிவத்தில்தான் தெரிய வரும்.

இந்த புரமொவில் இருந்து மீராமிதுன், சரவணன் மற்றும் தர்ஷன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்த பட்டியலில் இன்னும் யார் யார் இணைந்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

வனிதா இல்லாத பிக்பாஸ் வீடு அமைதியாக இருக்குமா? அல்லது வனிதாவை பொறுப்பை வேறு யாராவது கையில் எடுப்பார்களா? என்பதும் போகப்போகத்தான் தெரியும்.
 

More News

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: பிரபல பாஜக பிரமுகர்

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தின் கரெக்டான ரன்னிங் டைம்!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே

வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா,

அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.