மீராமிதுன் வெளியேற்றம்: அடுத்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று மீராமிதுன் ஒரு வழியாக வெளியேற்றப்பட்டார். மேலும் மீராவை பிக்பாஸ் ரகசிய அறையில் தங்க வைத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில நாட்கள் கழித்து செல்ல வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்களில் சாக்சி, ஷெரின் ஆகியோர்களும் இதுகுறித்து பேசினார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி மீராமிதுனை பிக்பாஸ் வீட்டில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றினார் பிக்பாஸ்
இந்த நிலையில் மீராமிதுன் வெளியேறும்போது சேரன் அவரிடம் வருத்தம் தெரிவித்தார். ஆனால் தவறு செய்த மீராவோ கடைசிவரை சேரனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அதுமட்டுமின்றி கடைசி நிமிடத்தில் கூட அவர் சேரனிடம், 'என்னை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தீர்கள், நினைத்தபடி வெளியேற்றி விட்டீர்கள் என்று குத்திக்காட்டிவிட்டுதான் வெளியே வந்தார். இதுகுறித்து கமல்ஹாசனிடம் மீரா பேசும்போதுகூட தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. சேரன் தன்னை ஆரம்பத்திலிருந்தே வெறுத்து வந்ததாகவும் அதனால் தான் அவ்வாறு சேரனிடம் கூறியதாகவும் மீரா கூறி சமாளித்தார்
தான் செய்த தவறுக்கு சேரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனதளவில் கூட அவருக்குத் தோன்றவில்லை என்பது துரதிஷ்டமே. இருப்பினும் கடந்த 4 நாட்களாக மீராவுக்கு அதிக வாக்குகள் தான் கிடைத்து வந்துள்ளதாகவும், சாக்சி தான் வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்ததாகவும், ஆனால் கடைசி ஒரு நாளில் சேரன் மீது மீரா சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டால் நிலைமை தலைகீழாக மாறி, மீரா வெளியேற்றப்படும் சூழ்நிலை வந்ததாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்
இரண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்களான வனிதா, மீரா ஆகியோர் வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டில் இனி சண்டையை யார் யார் ஆரம்பிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக சாண்டி, மதுமிதா களத்தில் இறங்கலாம் அல்லது சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளர் வைல்ட்கார்ட் எண்ட்ரி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com