சர்ச்சைக்குரிய டீப் ஃபேக் வீடியோ.. பிக்பாஸ் தமிழ் நடிகையின் அதிர்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகையின் சர்ச்சைக்குரிய டீப் ஃபேக் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து அவர் ஆவேசமாக பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளானது என்பதை பார்த்தோம்,
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளர் அபிராமி வெங்கடாசலம் டீப் ஃபேக் சர்ச்சை வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் ஆவேசமாக தனது சமூக வலைதளத்தில் கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் என் வாழ்க்கையில் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒரு ஒன்று நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். டீப் ஃபேக் வீடியோ பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. யார் வேண்டுமானாலும் ஒருவரை மோசமாக காட்டலாம் என்பது அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இது மாதிரி ஃபேக் வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி என்றால் அதை பகிர்ந்து வருபவர்கள் மிகப்பெரிய குற்றவாளி. ஆனால் எனக்கு எந்த கவலையும் இல்லை, இந்த பிரபஞ்சம் அந்த நபர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு தைரியமான பெண் என்பதால் எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது.
ஒரு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது நல்லது என்றாலும் அதில் எல்லாவிதமான கீழ்த்தரமான வேலைகளையும் செய்வது மிகவும் மோசமானது. குறிப்பாக பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சுகம் கிடைக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை. வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.
என்னை போன்று மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவை செய்துள்ளேன். இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்’ என்று நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com