சேரனைத் திட்டுவதா? சரவணனைக் கண்டிக்கும் பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை மரியாதைக்குரிய வார்த்தைகளால் சரவணன் பேசியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவரது இந்த செய்கையை திரையுலகில் உள்ள பலர் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா இதுகுறித்து கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை சரவணன் தரக்குறைவாகவும் மரியாதைக்குறைவாகவும் பேசியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேரன் வயது சரவணணின் வயதை விட அதிகமோ, குறைவோ எனக்கு தெரியாது. ஆனால் சேரனின் படைப்புகள் மிக அபாரமானது. அவரது 'பொற்காலம்', 'தவமாய் தவமிருந்து', 'ஆட்டோகிராப்' போன்ற குடும்ப பின்னணி உள்ள படங்கள் விருதுகள் பெற்றதோடு சேரனை ஒரு உயர்வான இடத்தில் நிறுத்தியது. ஒரு மரியாதைக்கு உரிய இயக்குனரை இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் 'வாடா போடா' என்று பேசும் போது உங்களுடைய மரியாதை குறைகிறது. ஏற்கனவே சரவணன் டென்ஷன் ஆனவர் என்பது எனக்கு தெரியும். சரவணனுடன் நான் ஒருசில படங்களில் பணி புரிந்துள்ளேன். அவருக்கு கோபம் அதிகம் வரும் என்பது எனக்கு தெரியும். ஒருமுறை பாக்கியராஜ் ஒரு நடிகரே இல்லை என்று கூறியவர் தான் சரவணன். புரட்சித் தலைவரால் தனது கலையுலக வாரிசு என்று கூறப்பட்ட பாக்யராஜை அவர் நடிகரே இல்லை என்று கூறியவர் சரவணன்.
எனவே சரவணன் கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுத்து 'வாங்க போங்க' என்று பேசுவது தான் தமிழரின் பண்பாக உள்ளது. அந்த பண்பை சரவணனும் கற்றுக்கொண்டு சேரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
ரமேஷ் கண்ணா கூறியபடியே இன்றைய நிகழ்ச்சியில் சேரனிடம் சரவணன் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com