சேரனைத் திட்டுவதா? சரவணனைக் கண்டிக்கும் பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை மரியாதைக்குரிய வார்த்தைகளால் சரவணன் பேசியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவரது இந்த செய்கையை திரையுலகில் உள்ள பலர் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா இதுகுறித்து கூறியதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை சரவணன் தரக்குறைவாகவும் மரியாதைக்குறைவாகவும் பேசியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேரன் வயது சரவணணின் வயதை விட அதிகமோ, குறைவோ எனக்கு தெரியாது. ஆனால் சேரனின் படைப்புகள் மிக அபாரமானது. அவரது 'பொற்காலம்', 'தவமாய் தவமிருந்து', 'ஆட்டோகிராப்' போன்ற குடும்ப பின்னணி உள்ள படங்கள் விருதுகள் பெற்றதோடு சேரனை ஒரு உயர்வான இடத்தில் நிறுத்தியது. ஒரு மரியாதைக்கு உரிய இயக்குனரை இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் 'வாடா போடா' என்று பேசும் போது உங்களுடைய மரியாதை குறைகிறது. ஏற்கனவே சரவணன் டென்ஷன் ஆனவர் என்பது எனக்கு தெரியும். சரவணனுடன் நான் ஒருசில படங்களில் பணி புரிந்துள்ளேன். அவருக்கு கோபம் அதிகம் வரும் என்பது எனக்கு தெரியும். ஒருமுறை பாக்கியராஜ் ஒரு நடிகரே இல்லை என்று கூறியவர் தான் சரவணன். புரட்சித் தலைவரால் தனது கலையுலக வாரிசு என்று கூறப்பட்ட பாக்யராஜை அவர் நடிகரே இல்லை என்று கூறியவர் சரவணன்.

எனவே சரவணன் கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுத்து 'வாங்க போங்க' என்று பேசுவது தான் தமிழரின் பண்பாக உள்ளது. அந்த பண்பை சரவணனும் கற்றுக்கொண்டு சேரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

ரமேஷ் கண்ணா கூறியபடியே இன்றைய நிகழ்ச்சியில் சேரனிடம் சரவணன் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காலில் விழும் சரவணன், தடுக்கும் சேரன்: முடிவுக்கு வந்த மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சேரன் மற்றும் சரவணன் ஆகிய இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே 

ரஜினியின் திரையுலக குரு காலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு கே.பாலசந்தர் என்றால் ரஜினிக்கு நடிப்பு பயிற்சி அளித்த குரு நடிகர் தேவதாஸ் கனகலா என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, ஜீவா இணையும் திரைப்படத்திற்கு தனுஷ் உதவி!

கோலிவுட் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே அறிந்ததே

'சாஹோ' ரிலீசுக்கு பின் பிரபாஸ் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து முடித்திருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகவிருக்கும் நிலையில்

பிக்பாஸ் தமிழ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக கருதப்பட்ட வனிதா, மீராமிதுன் ஆகியோர் வெளியேறிய பின்னர் இந்த வாரம் வெளியேறும் நபர் யாராக இருக்கும்