பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அபிராமி வெளியிட்ட வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐவர் எவிக்சன் பட்டியலில் இருந்தபோதிலும் அபிராமிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் பிக்பாஸ் விதியின்படி அவர் வெளியேறினார். வனிதாவின் பேச்சை கேட்டு முகினிடம் அவர் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகள், தொடர்ச்சியான அழுகைகள் பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்ததால் அவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்தது.

இந்த நிலையில் அபிராமி வெளியே வந்தவுடன் முதலில் அவர் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்றுமுன் அபிராமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நன்றி வீடியோ. அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய ஆதரவு, அன்பு, வாக்குகள், நம்பிக்கை, இவையனைத்தையும் அளித்த உங்கள் எல்லோருக்கும் நாம் ரொம்பவே கடமைப்பட்டுள்ளேன். ரொம்ப நன்றி' என்று பதிவு செய்துள்ளார். அபிராமியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.