அபிராமி சொன்ன 'ஐ லவ் யூ': யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கும் காதலுக்கும் பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. வனிதா வீட்டை விட்டு சென்றாலும் சண்டையின் அளவு குறையுமே தவிர தினமும் ஒரு சண்டையாவது பார்வையாளர்கள் பார்க்கலாம்
அதேபோல் கவின் இருக்கும் வரை பிக்பாஸ் வீட்டில் காதல் இருக்கும். ஆனால் கவினுக்கு சவால் விடுக்கும் வகையில் முகினும் அபிராமியை காதல் செய்வது போன்று ஒருசில சம்பவங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில், 'அபிராமியுடன் பேசிக்கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது' என்று முகின் கூற, அபிராமியோ, 'தனக்கு இந்த வீட்டில் ஒரு பையன் நல்ல நண்பனாக கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், முகினுடன் தனது துக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார். மேலும் அபிராமி, 'ஐ லவ் யூ' என்றும் ஓப்பனாக முகினை பார்த்தும் கூறினார். அபிராமி, லவ் யூ என்று சொன்னதும் முகின் வெட்கத்தால் தலை குனிந்தது இந்த புரமோவின் ஸ்பெஷல். இந்த லவ் யூ'வுக்கு காதல் என்பது அர்த்தமா? அன்பு என்ற அர்த்தமா? என்பதை போகப்போக பார்ப்போம்
#Day22 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/KxhbmSttdZ
— Vijay Television (@vijaytelevision) July 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com