'ஐ லவ் யூ' சொன்ன அபிராமி: முகினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
- IndiaGlitz, [Wednesday,August 07 2019]
பிக்பாஸ் வீடு என்பது ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீடா? அல்லது காதலர்கள் குடியிருக்கும் வசந்த மாளிகையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த சீசன் ஆரம்பமானதில் இருந்து ஒரே காதல் மயமாக உள்ளது. முதலில் கவினை காதலிப்பதாக அபிராமி கூற, அதன்பின் கவினை சாக்சியும், சாக்சியை கவினும் காதலிப்பதாக தெரிந்தது. பின்னர் திடீரென கவின் லாஸ்லியாவை காதலிப்பது போல் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நிகழ்ச்சியை நகர்த்தி சென்றனர்.
இதுவொரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் முகினை அபிராமி லவ் செய்ய, அந்த காதலை ஏற்க முகின் தயக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று அபிராமி ஒப்பனாக முகினிடம் தனது காதலை தெரிவிக்கும் வகையில் 'ஐ லவ் யூ' என்று சொல்லிவிட்டார். இதற்கு தான் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை என்று முகின் கூற, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம், என் காதலை ஏத்துக்கோன்னு நான் சொன்னேனா? நான் சந்தோஷமாக இருக்கின்றேன்' அது போதும்' என்று பதிலளிக்கின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் திகட்ட திகட்ட வருவதால் பிக்பாஸ் வீடு ஒரு சுவர் கட்டிய மெரீனா பீச், பூங்கா, சினிமா தியேட்டர், மற்றும் லாட்ஜ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இதே ரீதியில் சென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு போர் அடிக்கும் என்பதை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் எப்போது புரிந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Day45 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iW8GbWj4ZK
— Vijay Television (@vijaytelevision) August 7, 2019