சென்னை வந்ததும் முகின் தாயார் பார்த்தது யாரை தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்களின் வருகை வாரம் என்ற நிலையில் முகினை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து அவரது தாயாரும் சகோதரியும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் முகின் தாயாரின் வருகை குறித்து கேள்விப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமி, அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அபிராமி, ‘முகின் அம்மாவை பார்த்த தருணம் பெருமைக்குரியது. அவரை சந்தித்தது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அவரது புன்சிரிப்பான முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் மீது அபிராமிக்கு காதல் இருந்தாலும், முகின் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அபிராமியை தான் ஒரு நல்ல தோழியாக பார்ப்பதாகவே தெரிவித்தார். இருப்பினும் முகினுக்காக தான் வெளியே காத்திருப்பதாக அபிராமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.