மதுமிதாவை அடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

  • IndiaGlitz, [Sunday,August 18 2019]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தனது அவசர குணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது செயலை கமல்ஹாசனும் சேரனும் நாகரீகமாக கண்டித்தனர். மதுமிதா ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டதாக இருவரும் வருத்தப்பட்டனர். மதுமிதா தனது தவறை தற்போது புரிந்து கொள்ளாவிட்டாலும் வரும் நாட்களில் அவர் தனது செயலை தானே அலசிப்பார்த்து புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கமல் தெரிவித்தார்.

இந்த நிலையில் எவிக்சன் பட்டியலில் இருந்த மதுமிதா வெளியேற்றப்பட்டதால் இந்த வாரம் ஞாயிறு அன்று எவிக்சன் இருக்காது என்றே பார்வையாளர்களும் போட்டியாளர்களும் கருதினர். ஆனால் மதுமிதா வெளியேற்றப்பட்டது வேறு காரணத்திற்காக என்பதால் வழக்கம்போல் இன்றைய நிகழ்ச்சியில் எவிக்சன் உண்டு என்று கமல் நேற்றே தெரிவித்திருந்தார். அதை இன்றைய முதல் புரமோவிலும் உறுதி செய்தார்.

உணர்ச்சிகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும், உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது என்ற அறிவுரையுடன் ஆரம்பித்த கமல் இன்று எவிக்சன் உண்டு என்பதை உறுதி செய்ததோடு இன்று வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளரையும் அறிவிக்கின்றார். இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற அபிராமி வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராட்சசன்' படத்திற்கு விருது கிடைக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் விளக்கம்

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒருசில படங்களே சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவற்றில் ஒரு படமாக விஷ்ணுவிஷாலின் 'ராட்சசன்' படம் அமைந்தது என்பது தெரிந்ததே

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி-காஜல் அகர்வால்?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'Awe'. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா, கமல்ஹாசனிடம் பேசும்போது கூட

போட்டியே இல்லாமல் வெளியாகின்றதா தளபதியின் 'பிகில்?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

மதுமிதாவின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன? வெளிவராத தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா இன்று திடீரென வெளியேற்றப்பட்டதும்