தர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,September 15 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தர்ஷன். கடும் போட்டியாளராக ஆரம்பத்தில் இருப்பவர் இவர்தான். எத்தனை முறை எவிக்சன் பட்டியலில் வந்தபோதிலும் அதிக வாக்குகள் பெற்று முதலில் காப்பாற்றப்படும் நபரும் தர்ஷன் தான். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் குணம், குறிப்பிட்ட ஒருவரை கார்னர் செய்யாமல் நியாயமாக நடந்து கொள்வது, விட்டுக்கொடுக்கும் இடத்தில் விட்டுக்கொடுத்து போட்டி கொடுக்கும் இடத்தில் போட்டி கொடுப்பது ஆகியவை தர்ஷனின் குணங்களாக உள்ளது.

இந்த நிலையில் இன்று தர்ஷனின் பிறந்த நாள் ஆகும். இன்றைய பிறந்த நாளில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்தவருமான அபிராமி தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இன்று தர்ஷனின் பிறந்த நாள். அவருக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்கள். தர்ஷ் மச்சான் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.