தெருக்கூத்து டாஸ்க்கில் சொதப்பிய லாஸ்லியா? சாண்டியை தள்ளிவிட்டதால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று பொம்மலாட்டம் கலையை பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பாக செய்து காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில் இன்று தெருக்கூத்து கலையை பிரபலப்படுத்த பிக்பாஸ் போட்டியாளர் முயற்சிக்கின்றனர். தெருக்கூத்து கலைஞர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க, பயிற்சி கொடுத்தவர்களே அசரும் அளவுக்கு போட்டியாளர்கள் தெருக்கூத்தை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். குறிப்பாக சேரன் தெருக்கூத்தை மிக சிறப்பாக நடித்து காட்டினார். அதே போல் தர்ஷன், சாண்டி நடித்த காட்சிகளும் சிறப்பாக இருந்தது.

மேலும் வனிதா எமதர்மனாகவும், லாஸ்லியா சித்திரகுப்தனாகவும் நடித்த ஒரு காட்சியில் வனிதா 'எங்கே அந்த சித்திரகுப்தன் என்று கேட்க அப்போது ஓடி வந்த லாஸ்லியா, சாண்டியை தள்ளிவிட, அவர் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தெருக்கூத்து நாடகத்தின் ஒரு பகுதியா? அல்லது லாஸ்லியாவின் சொதப்பலா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

மேலும் தமிழே தெரியாத ஷெரினும் மிகுந்த ஆர்வத்துடன் தெருக்கூத்து டாஸ்க்கில் கலந்து கொண்டு அசத்துகிறார். மொத்தத்தில் இந்த தெருக்கூத்து டாஸ்க்கால் போட்டியாளர்கள் சண்டை, சச்சரவை மறந்துவிட்டு முழுநேர எண்டர்டெயினர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்!

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே போல் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்களின்

'நம்ம வீட்டு பிள்ளை' மைலாஞ்சி பாடல் குறித்த தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மைலாஞ்சி'

இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர்

பிரபல பின்னணி பாடகர்களான எஸ்பிபி, கேஜே ஜேசுதஸ் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இளம் பின்னணி பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர்தான் பாடகர் அஜீஸ்

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

யோகிபாபு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று