மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் வெளியேறும் பட்டியலில் வனிதா, மதுமிதா சரவணன், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய ஐந்து பேர் உள்ளனர் இவர்களில் மோகன் வைத்யா அல்லது சரவணன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபரை சாண்டி அறிவிப்பார் என கமல்ஹாசன் கூறினார். இதனை அடுத்து சாண்டி பிக்பாஸ் கவரை எடுத்துக் கொண்டு வந்து அதில் மோகன் வைத்யா பெயர் இருப்பதை அறிவித்தார். இதனை அடுத்து மோகன் வைத்யா கண்ணீருடன் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.

இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக சாண்டி அறிவித்த பெயர் வீட்டிலிருந்து வெளியேறும் நபரின் பெயர் அல்ல என்றும் வீட்டில் சேஃப் ஆக இருக்கும் நபரின் பெயர் என்றும் கமல்ஹாசன் ஒரு டுவிஸ்ட் வைத்தார். இதனையடுத்து இன்ப அதிர்ச்சியான மோகன் வைத்யா மகிழ்ச்சியில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

எனவே 5 பேர்களில் மோகன் வைத்யா இந்த வாரம் சேஃப் என்பதால் மீதமுள்ள வனிதா, மீராமிதுன், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய நான்கு பேர்களில் வெளியேறும் நபர் யார் என்பதை இன்று கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

அனேகமாக சரவணன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது ஏனெனில் வனிதா, மீராமிதுன், மதுமிதா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறி விட்டால் வீட்டில் உள்ள பரபரப்பும், சண்டையும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா,

அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே

வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது