ஒரே கல்லில் பல மாங்காய்கள்: கமல்ஹாசனின் அதிரடி திட்டம்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு கிடைக்க பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை குடும்பத்தலைவிகள் கூட சீரியல்களை மறந்துவிட்டு கண்டுகளித்தனர். அந்த நிகழ்ச்சியை அவர் நேர்மையாக நடத்திய விதம் அவரை சினிமாவில் ரசிக்காதவர்களை கூட ரசிக்க வைத்தது.

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அதே தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆடிஷன்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக தற்போது புதிய செய்தி ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்துவழங்குவதன் மூலம் தனது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது உள்பட பல நன்மைகள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை மீண்டும் அவர் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை மீண்டும் அவர் தொகுத்து வழங்கினால் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து அனைவரையும் அசர வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் இருந்து வரும் வரை பொறுமை காப்போம்.

More News

இது எந்திரன் டைப் படமல்ல: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றவுடன் கோலிவுட்டில் பலர் ஆச்சரியப்பட்டனர்.

'காலா' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

த்ரிஷாவிடம் குத்து வாங்கிய அதிர்ஷ்டகாரர்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் அக்கா, அம்மா வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி