சேரனை மீட்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு அஜித், விஜய் பட இயக்குனர் கண்டனம்

  • IndiaGlitz, [Sunday,August 25 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் அவமதிக்கப்படுவதாகவும், அவர் கஷ்டப்படுவதை காண சகிக்க முடியவில்லை என்றும், எனவே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து சேரனை மீட்டெடுப்போம் என்றும் இயக்குனர் அமீர் உள்பட ஒருசிலர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் பேரரசு, 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இயக்குநர் சேரனை யாரும் இழுத்து கொண்டு போய் சிறை வைக்கவில்லை. இது சேரனின் தனிப்பட்ட முடிவு. சேரன் அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் அவர் நீடிக்க கூடாது என கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை' என்று இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இயக்குனர் சேரனை மீட்க வேண்டும் என கூறுபவர்கள், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தூக்கி வர வேண்டும் என கூறுபவர்கள், சேரனின் பொருளாதார பிரச்னைகளை தீர்ப்பார்களா? என்றும் இயக்குனர் பேரரசு கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடித்த 'திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த 'திருப்பதி உள்பட இயக்குனர் சேரன் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் 'சென்சார்' தகவல்

விஜய் நடித்து வரும் 'பிகில் ' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை இந்துஜா. இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சூப்பர் டூப்பர்'. இந்த படத்தில் துருவா என்ற நடிகர் நாயகனாக நடித்து

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதி படம்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்துடன் ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்

அமேசானுக்கு மட்டுமல்ல, சென்னைக்கு ஆபத்து: சீமான் எச்சரிக்கை அறிக்கை

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த இரண்டு வாரங்களாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தீயை அணைக்க பிரேசில் எடுத்த முயற்சிகள் யாவும்

20 வருடங்களுக்கு பின்னும் 70% சார்ஜ் இருக்கும் மொபைல் போன்!

தற்காலத்தில் மொபைல் போன் என்பது அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. மொபைல் போன் இல்லாமல் வாழவே முடியாது

ரஜினிக்கு சவால் விடுத்த மன்சூர் அலிகான்: மொட்டை அடிப்பதாகவும் அறிவிப்பு!

ஒரு திரைப்படத்தை பிரபலப்படுத்த வேண்டாம் என்றால் அந்த படத்தின் புரமோஷன் விழாவில் ரஜினியை பற்றி தாக்கி பேசினால் போதும் என்ற யுக்தியை கடந்த சில வருடங்களாக ஒருசில திரையுலகினர் கடைபிடித்து வருகின்றனர்.