தாடி பாலாஜி மனைவியா இவர்? டோட்டலாக மாறிவிட்ட நித்யா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதே இருவரும் பிரிந்து வாழ்ந்தனர் என்பதும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவரையும் சேர்த்து வைக்க சக போட்டியாளர்கள் மற்றும் கமல்ஹாசன் தீவிர முயற்சி செய்தனர் என்பதும் அதன் பின்னர் போட்டியின் கடைசி நாளன்று இருவரும் தாங்கள் இணைந்து விட்டதாக அறிவித்தனர் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதன் பின்னரும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்ததால் தற்போது தனித்தனியாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நித்யா தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது மற்றும் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் மாடர்ன் உடையில் வித்தியாசமான மேக்கப்பில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்த்த தாடி பாலாஜியின் மனைவியா இவர்? என்று ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.