பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் வீட்டில் நடந்த சோகம்: ரசிகர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை சென்னையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஆரவ், அந்த சீசனின் டைட்டில் வின்னர் என்பது தெரிந்ததே. மேலும் அவர் மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ ’சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னரே அவர் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட புகழின் காரணமாக ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ ’ராஜபீமா’ ’மீண்டும் வா அருகில் வா’ போன்ற படங்களில் நடித்தார்
இந்த நிலையில் பிக்பாஸ் ஆரவ்வின் தந்தை உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் தந்தை மறைந்த செய்தியை கேட்டு சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout