பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் நடந்த விசாரணை என்ன? 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் கொடுத்த ஆள் கடத்தல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீசார் அவரிடம் விசாரணை செய்ய இன்று தமிழகம் வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸார் வனிதாவிடம் விசாரணை நடத்தவுள்ளதை பிக்பாஸ் நிர்வாகத்தினர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் வனிதாவிடம் விசாரணை மேற்கொள்ள முதலில் பிக்பாஸ் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து வனிதாவிடம் போலீசார் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்ததாக தெரிகிறது

இந்த நிலையில் வனிதா தனது மகளை அவரது விருப்பத்தின் பேரிலேயே அழைத்து வந்ததாகவும், தனது மகளை கடத்தி வரவில்லை என்றும் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து இன்று மாலை வனிதாவின் மகளை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து வனிதாவின் முன் குழந்தையின் முடிவை அறிய காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கின்றன