லாஸ்லியாவை கரெக்ட் செய்ய கவின் பாடிய கவிதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை எப்போது நான்கு பெண்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில் கவினின் பார்வை என்னவோ லாஸ்லியாவின் மீது இருப்பதாகவே தெரிகிறது.
நேற்று கவின், லாஸ்லியா குறித்து ஒரு கவிதையை பாட, அந்த கவிதைக்கு சாண்டி இசையமைக்க, லாஸ்லியாவே அந்த பாடலுக்கு நடனமாடினார். அந்த பாடல் இதுதான்.
அடியே லாஸ்லியா
என்னை பாத்தியா
கண்டுக்க மாட்றியே
ஒன் மனசு காஸ்ட்லியா
காதலை சொன்னேனே
கருணை காட்டினியா
சோகமா இருந்தேனே
பாவம் பாத்தியா
கவினின் மனதில் உடனடியாக உதித்த இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியது மட்டுமின்றி அவரது கவிதைத்திறனையும் லாஸ்லியா பாராட்டினார். இந்த பாராட்டை கேட்டு மீண்டும் இரண்டு லைன் கவிதையை கவின் கூறி அசத்தினார். அந்த இரண்டு லைன் இதுதான்.
பாட்டு நல்லா இருந்துச்சுன்னுன்னு சொன்னியே
ஆனா என்னை உட்டுட்டியே
என்னதான் லாஸ்லியாவை கரெக்ட் செய்ய கவின் முயன்றாலும் கழுவுற மீனில் நழுவுற மீனாக லாஸ்லியா இருப்பதால் கவின் எண்ணம் ஈடேறாது என்றே தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments