இந்த வாரமும் டபுள் எவிக்சன்.. இருவருமே வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!
- IndiaGlitz, [Saturday,January 04 2025]
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்சன் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரமும் டபுள் எவிக்சன் நடந்துள்ளதாகவும், அதில் இருவருமே வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 63வது நாளில் ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேற்றப்பட்டனர். அதேபோல், 69, 70வது நாளில் சத்யா மற்றும் தர்ஷிகா வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், 77வது நாளில் ரஞ்சித் வெளியேற்றப்பட்ட நிலையில், 83, 84வது நாளில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வாரம் ரானவ் மற்றும் மஞ்சரி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருமே 28வது நாளில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் எலிமினேஷன் குறித்த தகவல் வெளியானவுடன், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 90வது நாளை முடிவடைந்த நிலையில், இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதமாக உள்ளது. தற்போது ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். அவர்கள் அருண், தீபக், ஜாக்லின், முத்துக்குமாரன், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் விஷால். இவர்களில் நான்கு பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும், அதன் பின் அதில் ஒருவர் எட்டாவது சீசன் டைட்டில் பட்டத்தை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.