விஜய்யின் 'வாரிசு' படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,August 23 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமன் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ படத்திற்காக மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பது த்ரில் அனுபவமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அந்த படப்பிடிப்பில் கணேஷ் வெங்கட்ராமன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர் என்பது போகப் போக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நானே வருவேன்' தனுஷின் இரண்டு செம லுக்: கலைப்புலி எஸ்.தாணு வெளியீடு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவது தெரிந்ததே.

சென்னை, மதுரை, கோவை என திடீர் சுற்றுப்பயணம் செய்யும் நடிகர் விக்ரம்: ஏன் தெரியுமா?

சென்னை, மதுரை, கோவை உள்பட பல பகுதிகளுக்கு திடீரென நடிகர் விக்ரம் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'எல்லாமே 90க்கு மேல தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அதிதி ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'

த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேருவது உண்மையா? தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் செயல்பட போவதாக கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள்

ஐஸ்வர்யாவுடன் இணைந்து புகைப்படம், அடுத்த சில மணி நேரங்களில் தனுஷின் 'வாவ்' டுவிட்!

பிரிந்த மனைவியுடன் இன்று தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு சில மணி நேரத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'வாவ்'