சிறுநீர் கேட்கும் ரக்சிதா.. செய்வதறியாது திணறும் ராபர்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரண்மனை டாஸ்க் நடைபெற்று வரும் போது நிலையில் இந்த டாஸ்க்கில் ராணியாக நடித்து வரும் ரக்சிதா, சிறுநீர் வேண்டும் என கேட்க, அதனால் அரசர் வேடத்தில் இருக்கும் ராபர்ட் செய்வதறியாது திகைத்த காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள தீவிரமாக விளையாடுகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் ராபர்ட் மாஸ்டர் அரசராகவும் ரக்சிதா அரசியாகவும், அசீம் படைத் தளபதியாகவும் நடித்து வருகின்றனர். நேற்று இந்த டாஸ்க்கில் ஒரு பக்கம் அசீம் மற்றும் விக்ரமன் இடையே பிரச்சனை எழுந்த நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் ரொமான்ஸ் காட்சிகளும் ஓடி வருகின்றன.

இந்த நிலையில் அரசி ரக்சிதாவிடம் படை வீரர்களில் ஒருவரான ராம், ‘உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அதற்கு அரசி ரக்சிதா, ‘உங்களது கவனிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தற்போது எனக்கு சிறுநீர் வேண்டும் என்று கூறுகிறார். இதை அடுத்து ராம் அந்த இடத்தை விட்டு அகன்றார். சிறிது நேரம் கழித்து அரசர் ராபர்ட் இடம் அரசி ரக்சிதா நான் சிறுநீர் வேண்டும் என்று கேட்டேன் இன்னும் வரவில்லை என்று கூற ராபர்ட் மாஸ்டர் செய்வதறியாது திகைத்து அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனால் பண்டைய கால அரசர்கள் சிறிதளவு நீர் என்பதை சிறுநீர் என்று அழைத்து வருவார்கள் என்றும் சிறுவாணி ஆற்றின் நீரை கூட சிறுநீர் என்றுதான் அழைத்து வருவார்கள் என்றும் சில நெட்டிசன்கள் விளக்கமளித்துள்ளனர். ஆனால் நாளடைவில் சிறுநீர் என்பதற்கு வேறு அர்த்தம் ஏற்படும் வகையில் வந்து விட்டது என்பதால் எனவே ரக்சிதா சிறுநீர் என கூறியது அவருடைய கேரக்டருக்கு சரிதான் என ஒருசிலர் கூறிவருகின்றனர்.