சூடேற்றிய அசீம்.. ஆவேசமான ஏடிகே.. இன்னிக்கு செம எண்டர்டெயின்மெண்ட் இருக்கு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த 40 நாட்களில் ஒரு சில நாட்கள் தவிர தினந்தோறும் அசீம் ஒரு சக போட்டியாளர் உடன் சண்டை போட்டு வருகிறார். அவர் இதுவரை சண்டை போடாத போட்டியாளரே இல்லை என்ற அளவிற்கு ஆகியுள்ள நிலையில் நேற்று முதல் அவர் ஏடிகேவுடன் மோதி வருகிறார்.
இந்த வாரம் நடைபெற்று வரும் அரண்மனை டாஸ்க்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசீம் மற்றும் ஏடிகே காரசாரமாக மோதிக்கொண்டனர். இந்த நிலையில் இன்றும் அந்த மோதல் தொடருகிறது.
சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் அசீம், ஏடிகே ஆகிய இருவரும் மிக ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஏடிகே, ‘உங்களுடன் நான் கதைப்பதையே அசிங்கமாக கருதுகிறேன் என்று கூறுகிறார். அதுமட்டுமன்றி ’போடா’ என ஆத்திரமாக அசீமை கூறும் காட்சியும் உள்ளது.
இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம் இருந்தாலும் ஏற்கனவே அவர் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதால் அவர் இந்த வாரம் அநாகரீகமாக நடந்து கொண்டாலும் வெளியேற வாய்ப்பு இல்லை. ஆனால் இதே போல் ஒவ்வொரு வாரமும் அவர் தொடர்ந்து நடந்து கொண்டால் அவர் வெளியேறும் நாள் மிக விரைவில் இருக்கும் என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Day40 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/P8k6nEo1qF
— Vijay Television (@vijaytelevision) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com