பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு மீண்டும் காதலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் நடித்த ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காஜல் பசுபதி. அதன் பின்னராக இதயத்திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, சிங்கம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட காஜல் பசுபதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அரசியல்வாதிகள் உள்பட பலரையும் அவர் கலாய்த்து பதிவு செய்யும் டுவிட்டுக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், ’விட்டரில் சில நாட்கள் பேசிக்கொண்டிருந்தேன், நேற்று என்னுடைய காதலை சொல்லி விட்டேன், இன்று அக்செப்ட் பண்ணிட்டான்’ என்று தனது டுவிட்டர் காதல் குறித்து கூறியுள்ளார்.
இதனை அடுத்து காஜல் பசுபதிக்கு மீண்டும் காதல் தோன்றியுள்ளதா? அல்லது வழக்கம் போல யாரையாவது கலாய்க்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அவருக்கு மீண்டும் உண்மையிலேயே காதல் வந்து இருந்தால் அதற்கு தங்களது வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
8மாசமா Dm ல பேசிட்டு இருந்தோம் நேத்து சொல்லிட்டேன் இன்னைக்கு
— Kaajal Pasupathi (@kaajalActress) November 30, 2021
Accept பண்ணிட்டான்??#TwitterLove ❤️
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments