பிக்பாஸ் 12வது நாள்: சுரேஷ் ராக்ஸ், கேமுக்குள் வந்த கேப்ரி, அனிதாவின் ஆத்திரம் தேவையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.
நேற்றைய கேப்டன்ஷிப் டாஸ்க்கில் கேப்ரில்லாவுக்கு ஒருவர்கூட ஆதரவு தெரிவிக்காத நிலையை தன்னந்தனியாக அவருக்கு ஆதரவு தெரிவித்த சுரேஷ், அவரை முதுகில் சுமந்தபடி இரண்டு இளைஞர்களுக்கு இணையாக போராடினார். கை வலிக்கிறது என்று தெரிந்திருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேப்ரில்லாவுக்கு அவ்வப்போது ஊக்கம் அளித்து வந்த சுரேஷ் ஒருகட்டத்தில் அர்ச்சனா தனக்கு தைலம் தடவிய போது நெகழ்ச்சியில் கண்ணீர் விட்டது பார்வையாளர்களை மத்தியில் அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது. இந்த சீசனில் சுரேஷ் மிகவும் திறமையாகவும் தந்திரமாகவும் அதேநேரத்தில் உணர்வுபூர்வமாகவும் விளையாடி வருவதால் அவர் இந்த போட்டியில் கடைசி வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
அதேபோல் நேற்று கேப்ரில்லாவின் காட்சிகளும் திருப்திகரமாக இருந்தது. தான் சுரேஷுக்கு அதிக வலி கொடுத்து கொடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் அவர் பேசுவதும் அவரிடம் மன்னிப்பு கேட்பதும் அதன் பின்னர் அவருக்காக டீ போட்டுக் கொண்டு கொடுப்பதுமான காட்சிகள் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் பாலாஜியிடமும் ஆஜித்திடமும் ஏன் தனக்கு வாக்களிக்கவில்லை என்று வாதாடிய விதத்தைப் பார்க்கும்போது அவர் ’காணவில்லை’ என்ற நிலையில் இருந்து கேமுக்குள் வந்து விட்டதாகவே தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் நேற்று அனிதா தேவையில்லாமல் சோம்சேகரிடம் ஆத்திரமடைந்ததுதான் எரிச்சலை ஊட்டியது. ஆரம்பம் முதலே சின்ன சின்ன விஷயத்தை பெரிதாக்கி வரும் அனிதா, நேற்றும் சோமசேகர் தெரிவித்த ஒன்றை வைத்துக்கொண்டு அவரிடம் சண்டைக்கு சென்றது, அதன் பின் அவரிடம் சமாதானம் செய்து கொண்ட காட்சிகள் வெளியாகின.
மேலும் நேற்றைய கேப்டன்ஷிப் டாஸ்க்கில் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டவர்கள் சொகுசாக முதுகில் உட்கார்ந்து கொண்டும், அவரை தேர்வு செய்தவர்கள் அவரை சுமந்து கொண்டும் இருந்ததுதான் உறுத்தலாக இருந்தது. உண்மையில் கேப்டன் போட்டியில் தேர்வு பெற்றுள்ள வேல்முருகன், ரியோ, கேப்ரில்லா ஆகிய மூவர்தான் மற்றவர்களை முதுகில் தூக்கி இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் உல்டாவாக இந்த போட்டியை நடத்தியது ஏன்? என்று தெரியவில்லை.
மேலும் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி நேற்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் பிக்பாஸ் பட்டத்தை பெற்ற இருவருக்கும் சிறை தண்டனை வழங்கியது எந்த அளவுக்கு நியாயம் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இனிமேலாவது அவர்கள் மீண்டும் கேமுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு சில காட்சிகளை தவிர ஒட்டு மொத்தமாக சுவராசியமாக இருந்தது என்பதும் இன்று கமல்ஹாசன் தோன்றும் காட்சி என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments