அடுத்த வாரம் நாமிநேஷனில் நான்கு போட்டியாளர்கள்: யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஆரம்பித்து நேற்றைய இரண்டாவது நாளும் முடிவடைந்த நிலையில் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக நேற்று போட்டியாளர்கள் தங்களுடைய அனுபவங்களையும், தங்களுக்கு ஏற்பட்ட சோகமான நிகழ்வுகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேல்முருகனின் அனுபவங்கள் அனைவரின் கண்களை குளமாக்கியது. சனம்ஷெட்டி கூறிய விபத்து பின்னர் அதில் இருந்து மீண்டதும் உருக்கமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று சற்று முன் வெளியான முதல் புரமோவில் போட்டியாளர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் அடுத்த வார நாமினேஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ். அதில் கேப்ரில்லா, ரேகா, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வர் அடுத்த வார நாமினேஷனில் உள்ளதாக பிக்பாஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து பார்வையாளர்களின் வாக்களிப்பின்படி இவர்கள் நால்வரில் ஒருவர் அடுத்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார்

கொல்கத்தாவுக்கு அக்னிப் பரீட்சை! 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: தொண்டர்கள் அதிர்ச்சி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சாலையின் நடுவே தூக்கிலிடுங்கள்… உறுப்பை ஊனமாக்குங்கள்… ஹத்ராஸ் சம்பவம் குறித்து நடிகை மதுபாலா காட்டம்!!!

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை மதுபாலா ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து காட்டமான கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

72 வயதில் முதுகலைத் தேர்வு எழுதிய எம்.எல்.ஏ… வைரலாகும் தகவல்!!!

ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ ஒருவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது முதுகலை பட்டத்திற்கான