close
Choose your channels

எவன் அவன்? அர்ச்சனாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதாத போட்டியாளர் யாருமே இல்லை என்ற நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ஜே அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தியை வந்தவுடன் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒரு வார நிகழ்ச்சியை அவர் டிவியில் பார்த்துவிட்டு வந்துள்ளதால் வீட்டில் உள்ள நிலைமை மற்ற போட்டியாளர்களை விட அவருக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என்று அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு சமையல் மட்டும் தான் பிடிக்கல அதனால் கை தூக்க முடியலை’ என்று குரல் பதிலாக வர, ‘எவன் அவன்’ என்று அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு சுரேஷ், ‘அதை சொன்னவன தான் கேட்கணும்’ என்று கூற அதற்கு அர்ச்சனா ‘கேட்டு சொல்றிங்களா? என்று கேட்க, ‘அவனை அனுப்பிச்சிங்கன்னா கேட்டு சொல்றேன்’ என்று சுரேஷ் மீண்டும் பதிலடி கொடுக்கின்றார்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஒருசில மணி நேரங்களில் அர்ச்சனா கிண்டல் செய்ய ஆரம்பிக்க, அதனை புரிந்து கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தியும் பதிலடி கொடுத்து வருவதால் இன்று ஒரு தரமான சம்பவம் இருப்பதாகவே கருதப்படுகிறது

அர்ச்சனா இருக்குமிடம் கலகலப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் என்பதால் அவரிடம் சுரேஷின் தந்திரங்கள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தனக்கு எதிராகக் கிளம்பிய நிலையிலும் சுரேஷ் சக்கரவர்த்தி அனைவரையும் சமாளித்து வருவது நிச்சயம் ஒருவகையில் பாராட்டக்கூடிய ஒன்றே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment