சண்டையில் இருந்து சமாதானமா? டூயட் பாடிய சுரேஷ்-அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று எவிக்சன் பாஸை பெற செய்த தந்திரத்தை ரம்யா பாண்டியன் சாதுரியமாக முறியடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அனிதா உட்பட கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் பகைமையை வளர்த்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி அடுத்து என்ன மூவ் செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோ பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அனிதா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் டூயட் ஆடுகின்றனர். ஏய் ஏய் சின்ன மச்சான், செவத்த மச்சான் என்ற பாடலை அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி பாடி ஆடி வரும்போது, ‘ஊருக்குள்ள உங்களை ஏசுறாங்க’ என்று சுரேஷை பார்த்து அனிதா பாடிய போது சக போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து அனிதாவுக்கு ஆதரவாக கை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய இருவரும் கலகலப்பாக ஆடியதை பார்க்கும்போது எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருந்தவர்கள் சமாதானம் ஆகிவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் அனிதா எளிதில் சமாதானம் ஆகிவிடுவாரா? சுரேஷும் வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பாரா? என்பதை வரும் வாரங்களில் தான் பார்க்க வேண்டும்..

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் கலகலப்பாகவும், அதே சமயத்தில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஈடுகொடுக்கும் வகைகள் சக போட்டியாளர்கள் நடந்துகொள்வதுமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.