பாசாங்கு செய்வது யார்? மிராவை சுற்றி வளைத்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் எப்படி ஒவ்வொருவரையும் குறி வைக்கிறாரோ அதேபோல் போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மீராவை குறி வைத்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் மீராமிதுன் செய்த முரண்பாடுகளால் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அவர் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சி போல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது, கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள கிளீனிங் டீம் கடமையுணர்வுடன் வேலை செய்கிறார்களா? அல்லது பாசாங்கு செய்கிறார்களா? என்பது தான் இந்த நிகழ்ச்சியின் தலைப்பு.

கடமை உணர்வுடன் வேலை செய்வதாக தர்ஷன் தரப்பினரும், பாசாங்கு செய்வதாக சரவணன் தரப்பினரும் என இரண்டு குழுக்களாக பிரிந்து வாதாடுகின்றனர். இந்த விவாதத்தில் பெரும்பாலானா வாதங்கள் மீராவை கேலி செய்யும் வகையிலேயே இருப்பதால் நிகழ்ச்சியை நடத்தும் அவர் அதிர்ச்சி அடைகிறார். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாக போட்டியாளர்கள் மீராவை சுற்றிவளைத்து பேசி வருவதால் அவர் அமைதி அமைதி என்று கூறி சமாதானம் செய்ய முயல்வதோடு இன்றைய புரமோ வீடியோ முடிவடைகிறது.

மொத்தத்தில் மீராவுக்கு எதிராக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது.