லாஸ்லியாவின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பாகத்திலும் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார். முதல் பாகத்தில் ஓவியா, இரண்டாம் பாகத்தில் ரித்விகா, தற்போதைய மூன்றாம் பாகத்தில் யாரை கேட்டாலும் உடனே வெளிவரும் பெயர் லாஸ்லியா
அதனால்தான் பிக்பாஸ் 3 ஆரம்பித்த முதல் நாளே லாஸ்லியாவுக்கு ஆர்மிகள் குவிந்தன. அவரும் இன்று வரை பிக்பாஸ் வீட்டில் ஜாலியாகவும், அதே நேரத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நேர்மையாகவும் விளையாடி வருகின்றார். இந்த நிலையில் நெட்டிசன்கள் லாஸ்லியா குறித்த பல விஷயங்களை கண்டுபிடித்து பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்
லாஸ்லியாவின் சொந்த நாடு இலங்கை என்பது அனைவரும் தெரிந்ததே. இலங்கையில் அவர் பிறந்தது கிளிநொச்சியில், படித்தது வளர்ந்தது எல்லாம் திரிகோணமலை மற்றும் கொழும்புவில். லாஸ்லியாவுக்கு வயது 23. ஏகப்பட்ட லவ் புரபோசல்கள். ஆனால் எதிலும் சிக்காமல் இன்று வரை சிங்கிளாக இருந்து வருகின்றார்
பள்ளிப்பருவத்திலேயே தமிழார்வம், பேச்சுப்போட்டி ஆகியவைகளில் ஈடுபாடு உண்டு என்பதால் மீடியாவில் எளிதில் வேலை கிடைத்தது. லாஸ்லியா வாசிக்கும் எந்த செய்தியும் இலங்கையில் வைரலாகியுள்ளது. காரணம் அவரது உச்சரிப்பு மட்டுமின்றி செய்தி வாசிக்கும் அழகும்தான்
லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட செல்லப்பெயர் இருந்தாலும் அவருக்கே பிடித்த ஒரு செல்லப்பெயர் 'முட்டைக்குஞ்சு' என்பதுதான். லாஸ்லியா ஒரு தீவிர ரஜினி ரசிகை என்பது கூடுதல் தகவல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com