முதல்முறையாக வறுத்தெடுத்த கமல்ஹாசன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இடுப்பு பிரச்சனை உட்பட பல பிரச்சினைகள் தோன்றி இருக்கும் நிலையில் அந்தப் பிரச்சினைகளை கமல்ஹாசன் இன்று தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று மீராமிதுனுக்கு ஒரு குறும்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் கமல்ஹாசன் கூறியதாவது: தீராத பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கும் இடம் கிராம சபை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். ஆனால் நம்ம கிராமத்தில் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்கள்தானே. நம்ம நாட்டாமையே போட்டு தள்ளி விட்டார்கள். ஆனால் நம்ம சும்மா இருப்போமா, நம்ம பிராது கொடுப்போம் இல்ல.. இன்னைக்கு ராத்திரி பாருங்க என்று கமல்ஹாசன் நடிப்பில் ஒரு புரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முதல்முறையாக போட்டியாளர்கள் சிலரை கடுமையாக பேசியதாகவும், குறிப்பாக மீராமிதுனை வறுத்தெடுத்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஒட்டுமொத்த பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தவர்ளான ஜூலி உள்பட ஒருசிலரிடம் கமல்ஹாசன் அமைதியாகவே பேசினார். ஆனால் இன்று அவருடைய விஸ்வரூபத்தை பார்த்து போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றைய நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் சுவாரஸ்யமாக இருக்கும் என கருதப்படுகிறது
 

More News

வைரலாகி வரும் விஜய் பட நடிகையின் பிகினி ஸ்டில்

கோலிவுட்டில் 'கேடி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தமிழ்ப்பட நாயகி கடத்தப்பட்டாரா? நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

தமிழ் படம் ஒன்றில் நாயகியாக நடித்த ஒருவர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேரனுடன் செல்பி எடுத்த மீராமிதுன்: இது எப்போ?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சேரனை கடந்த சில வாரங்களாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அவர் கடைசியாக சேரன் மீது கூறிய இடுப்பு குற்றச்சாட்டு எடுபடவில்லை

எவிக்சனில் இருந்து தப்பித்த மீரா! சிக்கினாரா சாக்சி?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷனில் அபிராமி, கவின், சேரன், சரவணன், மீராமிதுன் மற்றும் சாக்சி ஆகியோர் உள்ளனர்.