நிக்சனுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.. மாயா கேங் அதிர்ச்சி.. ஃபுல் ஃபார்மில் விசித்ரா..!

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

பிக் பாஸ் இன்று வைத்த ஒரு டாஸ்க் நிக்சனுக்கு ஆப்பு வைத்தது போல் இருந்தது மட்டுமின்றி மாயா குரூப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் போட்டியாளர்கள் சிலர் ஒரு சில கருத்துக்களை தெரிவித்த நிலையில் அந்த கருத்துக்களுக்கு விளக்கம் கூற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

’நீ வந்து ஆயாம்மா வேலைக்கு வரல, ஒரு கேம் விளையாட வந்திருக்க, எது தேவையோ அதை பேசு’

’கேப்டன் பயாஸ்டாக இருந்த மாதிரி எனக்கே பீல் ஆகுது’

’இவர்களுக்கும் ரெட் கார்ட் வாங்கிட்டு போனவங்களுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை’

’ப்ரோ கண்ணாலேயே அப்படியே செக் பண்றான், அவை மூஞ்சியை பார்க்கிறது இல்லை, கீழே இருந்து மேல வரைக்கும் பாக்குறான்’

’வினிஷா வேலைக்காரி, என்னை மாதிரி இல்லை. ஒருத்தருக்கு ஒன்னு அட்ராக் ஆகணும் இல்ல, எனக்கு வந்து உடம்புங்கறது பெர்பட்டா இருக்கணும், இதுக்கு ஏத்த மாதிரி இது, இதுக்கேத்த இதுன்னு இருக்கணும். அவங்களுக்கு மட்டும் குட்டியா இருக்கு.. அவங்க கண்ணு நல்லா இருக்கு, டிரஸ் போட்டா பெர்ஃபெக்ட்டா இருக்கு, அது ஓகே,, பூர்ணிமா அழகா இருக்காங்க, அந்த மாதிரி தான் இருக்கணும்.. பெர்பெக்ட்’

மேற்கண்டவற்றை குறிப்பிட்டுள்ள பிக் பாஸ் இதைச் சொன்னவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

வினுஷா குறித்து கூறியது நிக்சன் என்பதால் அவர் விளக்கம் அளிக்கும் காட்சி மட்டும் ப்ரோமோவில் உள்ளது. நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இப்படி மூஞ்சி எல்லாம் வச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நான் செம டென்ஷன் ஆயிடுவேன், அது மாதிரி நான் பேசவில்லை, சத்தியமா நான் தப்பாக சொல்லவில்லை என்று கூறினார்.

ஆனால் வினுஷா இப்போது இல்லை என்றாலும் நாங்க அவளுக்காக கேட்போம் என்று விசித்ரா கூறியதை எடுத்து அவர் ஃபுல் ஃபார்ம்யில் இருக்கிறது போல் தெரிகிறது.

நிக்சன் கூறியதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி பிக்பாஸ் அவருக்கு ஆப்பு வைத்துள்ளதை அடுத்து மாயா பூர்ணிமா கேங்கும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில் மாயா பூர்ணிமா கேங்கில் ஒரு குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் இன்றைய எபிசோடு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.