close
Choose your channels

80களின் பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் தாத்தா: வைரல் புகைப்படம்

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவராசியமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் நடிகர் மோகன், நடிகர் கார்த்திக், இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பிரியதர்ஷன் ஆகிய 80களின் திரையுலக பிரமுகர்களுடன் சுரேஷ் தாத்தா உள்ளார். இந்த புகைப்படம் எப்போது எங்கு எடுத்த புகைப்படம் என்று சுரேஷ் தாத்தா பதிவு செய்யவில்லை என்றாலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மோகன், கார்த்திக் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் ’மௌன ராகம்’ என்ற திரைப்படத்தில் இணைந்து பணிபுரிந்ததால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் 80களின் பிரபலங்களுடன் சுரேஷ் தாத்தா பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment