தமிழ் சினிமா ஹீரோ போல் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி மகன்: வைரல் புகைப்படம்
- IndiaGlitz, [Thursday,March 25 2021]
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்பத்தில் சில வாரங்கள் கலக்கினார் என்பதும், அதனால் அவர் இறுதிப் போட்டி வரை கிட்டத்தட்ட செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் திடீரென 35வது நாளிலேயே அவர் போட்டியிலிருந்து எலிமினேட் ஆனார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது சக போட்டியாளர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது மகன் சுஷாந்த் சுரேஷின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தனது மகனின் பிறந்த நாளையடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய சுரேஷ் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
சுரேஷ் சுரேஷ் சக்கரவர்த்தியின் மகன் சுஷாந்த் அசல் தமிழ் சினிமா ஹீரோ போலவே இருப்பதாக நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இவர் தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.