சிவாஜி வீட்டு மருமகள் ஆகின்றாரா பிக்பாஸ் சுஜா?

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

நடிகை சுஜா தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் இடையில் இணைந்தாலும், மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுத்தார். குறிப்பாக சினேகனுக்கும் இவருக்கும் கடும்போட்டி ஏற்பட்டது.

இந்த நிலையில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பேரனும், ராம்குமார் மகனுமாகிய சிவாஜி தேவ்வை நடிகை சுஜா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவரையே சுஜா திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதைபோல் சமீபத்தில் இருவரும் திருப்பதியில் இருக்கும் புகைப்படத்தை சுஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

'சிங்கக்குட்டி', 'புதுமுகங்கள் தேவை', மற்றும் 'இதுவும் கடந்து போகும்' ஆகிய படங்களில் நடித்தவர் சிவாஜிதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.