திடீரென குறைந்த பணப்பெட்டியின் மதிப்பு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 94 வது நாளாக இன்று நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் விறுவிறுப்பு அதிகமாகி உள்ளது
நேற்று பிக் பாஸ் பணப்பெட்டியை அறிமுகப்படுத்திய நிலையில் ஒரு லட்சம் முதல் தொடங்கி 5 லட்சமாக அதிகரித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் பணப்பெட்டியின் மதிப்பு கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று பிக் பாஸ் ட்விஸ்ட் வைத்துள்ளது போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நேற்று 5 லட்சம் ஆக முடிவடைந்த நிலையில் இன்று திடீரென ஒன்பது லட்சம் ஆக பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்தது. இதனை அடுத்து ’கொஞ்சம் பார்த்து ஏத்துங்க பிக்பாஸ், நான் எடுப்பது குறித்து யோசிக்கிறேன்’ என்று மணி கூறுகிறார். வேறு சில போட்டியாளர்களும் இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர்
இந்த நிலையில் திடீரென பிக் பாஸ் பணப்பெட்டியின் மதிப்பை குறைத்துள்ளார். ஒன்பது லட்சம் இருந்த என இருந்த பணப்பெட்டியின் மதிப்பு திடீரென 3.5 லட்சமாக குறைந்துள்ளது
இருப்பினும் இப்போது வரை பணப்பெட்டியை எடுப்பது குறித்து எந்த ஒரு போட்டியாளரும் தெளிவில்லாமல் இருப்பதால் இந்த சீசனில் பணப்பெட்டியை யாரும் எடுக்க மாட்டார்களோ என்ற எண்ணமும் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments