இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய முடிவை பிக்பாஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு பார்வையாளர்களால் கேலி கிண்டல் செயல்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்ஸன், மணி, தினேஷ், அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகிய ஐந்து பேர் நாமினேன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிக்ஸன், அல்லது மணி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து புயல் பாதிப்பு சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது, அவர்கள் தான் பெரும்பான்மையினர்களா? அவர்கள் மட்டும்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்களா? என்று பார்வையாளர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout