பிக்பாஸ் செளந்தர்யாவுக்கு இப்படி ஒரு காதலா? பிரேக் அப் ஆனது ஏன்?
- IndiaGlitz, [Saturday,October 19 2024]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் ஒரு பிரச்சனை காரணமாக பிரேக் அப் செய்து விட்டதாகவும், சக போட்டியாளர்களிடம் தனது காதல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவர் சௌந்தர்யா. கடந்த சில நாட்கள் இவர் நன்றாக விளையாடி வருகிறார் என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தனது சக போட்டியாளர்களிடம் தனது காதல் அனுபவத்தை சௌந்தர்யா பகிர்ந்து கொண்டார். 11ஆம் வகுப்பு படிக்கும் போது, ஒரு நபரை காதலித்ததாகவும், அந்த காதல் கல்லூரி வரை நீடித்ததாகவும் கூறிய சௌந்தர்யா, நான் வேலை செய்ததை அந்த நபர் விரும்பவில்லை, அதனால் அவரிடம் பலமுறை அடி வாங்கி இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
ஒருமுறை கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் துறையில் வாய்ப்பு வந்த போது, அந்த நபருக்கு அது பிடிக்கவில்லை என்றும், எனக்கு வேலையின் மேல் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் போட்டோ சூட் எடுத்தேன் என்றும், அந்த புகைப்படங்களை என்னுடைய செல்போனில் மறைத்து வைத்திருந்த போது, அவர் அதை பார்த்து நடுரோட்டில் வைத்து அடித்து விட்டார் என்றும் கூறினார்.
சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், நடுரோட்டில் வைத்து என்னை அடித்த பிறகு, அவரிடம் இருந்து விலகி விட்டேன். எனக்கு காதலை விட வேலை செய்வது தான் முக்கியம் என்ற முடிவை எடுத்தேன், என்று கூறினார்.
அவருடைய காதல் அனுபவம் பகிர்ந்து போது, சக போட்டியாளர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவருடைய காதலருக்கு கண்டனங்களையும் பதிவு செய்தனர்.