பிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்! பின்னணியில் 'மெர்சல்' பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகு சீக்கிரமே வெளியேறி விடுவார் என்று ரசிகர்களால் ஊகிக்கப்பட்டவர்களில் ஒருவர் சோமசேகர். ஆனால் அனைவரின் ஊகத்தை பொய்யாக்கி இறுதிப்போட்டி வரை அவர் சென்றது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது
குறிப்பாக ஃபினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் ஒருவராக பங்கேற்றார் இருப்பினும் அவர் இறுதிப்போட்டி தினத்தில் முதல் நபராக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களாக விளையாடிய சோமசேகர் அன்பு குரூப்ப்பில் ஐக்கியமானாலும், மற்றவர்கள் மீது பகைமை பாராட்டாமல் அனைவரிடமும் நட்பு பாராட்டிய இருந்தார் என்பது அவருடைய மிகப்பெரிய பிளஸ்களில் ஒன்றாகும்
இந்த நிலையில் சோமசேகர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தனது வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது அவருடைய குடும்பத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
மேலும் இந்த வீடியோவின் பின்னணியில் தளபதி விஜய்யின் ’மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலிப்பதும் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. சோம்சேகர் வீட்டிலுள்ள குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அவரை கட்டியணைத்து வரவேற்கும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ தற்போது மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#som is back home! Nalla rest edu ma!
— SOMCharm (@SomCharm) January 18, 2021
Aww.. look he has taken #gaby and #zaara home too. #littlesisters https://t.co/65df33dqvu pic.twitter.com/oOthKh5ogl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com