தன்பால் சேர்க்கை கதையில் பிக்பாஸ் சுருதி பெரியசாமி.. ஓடிடியில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சுருதி பெரியசாமி நடிக்கும் தனபால் சேர்க்கை கதையம்சம் கொண்ட ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ என்ற திரைப்படம் ஷார்ட்ஃபிளிக்ஸ் என்ற ஓடிடியில் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை என்னவெனில் ஷகிரா என்ற பெண்ணை இர்பான் என்பவர் காதலித்து வருகிறார். இந்த நிலையில் காதலித்த பெண்ணையே பெற்றோர் தற்செயலாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் அளவில்லா ஆனந்தம் அடைகிறார்.
இந்த நிலையில் தன்னிடம் பேச வேண்டும் என்று ஷகிரா அழைப்பு விடுக்க, இர்பான் மிகவும் ஆவலுடன் அவரிடம் பேச செல்லும்போது ’தான் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருப்பதாகவும் இருவரும் தன்பால் சேர்க்கை உறவில் இருப்பதாகவும் கூற அதிர்ச்சி அடைகிறார் இர்பான். தன்னை தன்னுடைய காதலியுடன் சேர்த்து வைக்குமாறு ஷகீரா சொல்ல, அதன்பின் இர்பான் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை
இந்த படத்தில் ஷகிரா என்ற இஸ்லாமிய பெண்ணாக நிரஞ்சனா நெய்தியார், அவருடன் தன்பால் சேர்க்கை உறவில் இருக்கும் பெண்ணாக சுருதி பெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஷகிராவை காதலிப்பவராக அர்ஷத் ஃபெராஸ் நடிக்க மேலும் இந்த படத்தில் ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச்.எம்.மகேஷ், சிவசக்தி, சுதா, பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஜெயராஜ் பழனி இயக்கி உள்ளார். தர்ஷன் ரவிக்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
90 நிமிட திரைப்படத்தில், துளியும் ஆபாசத்துக்கோ, இரட்டை அர்த்த வசனத்துக்கோ இடம் கொடுக்காமல், ஆண் – பெண் காதல் போல தன்பால் காதலும் இயல்பானதே, மதித்து அங்கீகரிக்கத்தக்கதே என்பதை நேர்மையாக, உளப்பூர்வமாக, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.
கதையை மீறி பயணிக்காமல், அதே நேரத்தில் கடலும், கடல் சார்ந்த இடங்களையும் கவித்துவமாய் படம் பிடித்திருத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஆரம்பத்தில் டைட்டில்கள் போடும்போது ஒலிக்கும் வித்தியாசமான பின்னணி இசையைக் கேட்கும்போது இசையமைப்பாளர் யார் என தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. பின்னணி இசையை படம் முழுவதும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தர்ஷன் ரவிக்குமார்.
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ – நம் கல் மனதை இளக்கி பண்படுத்தும் நல்ல படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments