பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்த ஓரின சேர்க்கையாளர் படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்... பெண்ணும் பெண்ணும்... என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள். இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது குறித்தும் விவரிப்பது தான் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.

அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை நீலிமா இசை இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகிகளின் முகங்கள் வண்ணமயமாக இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

காதலைப் பற்றி காமத்தை கடந்து உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
 

More News

காதலர் தினத்தில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி கொடுத்த பால சரவணன்.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் பாலசரவணன் நேற்று காதலர் தினத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு வாங்கி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இந்தி திரையுலகிற்கு செல்லும் சாம் சிஎஸ்.. பிப்ரவரி 17ல் ரிலீஸ்..!

'விக்ரம் வேதா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தற்போது இந்தி வெப் சீரிஸ் ஒன்றுக்கு இசையமைத்திருப்பதாகவும் அந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள்

40 வயதிலும் கிளாமரில் கலக்கிய விஜய், விஷால் பட நடிகையின் புதிய பட அறிவிப்பு..!

விஜய், விஷால் படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் தனது சமூக வலைதளத்தில்

இன்னொரு தேசிய விருது உறுதி: 'வாத்தி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த 'வாரிசு' பிரபலம்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என 'வாரிசு' இயக்குனர் வம்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

ஒரு வழியாக காதலரை அறிவித்தார் பிக்பாஸ் ஆயிஷா.. திருமணம் எப்போது?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா கடந்த சில நாட்களாக காதலித்து வரும் நிலையில் அவர் தனது காதலரை முதல் முறையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.