பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் திருமணம்: ஸ்ருதிக்கு மாப்பிள்ளை ஆனவர் யார் தெரியுமா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஸ்ருதிக்கும் சக போட்டியாளர் ஒருவருக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் புரமோவில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்களில் ஒரு சிலர் வெளியேறி உள்ளனர் என்பதும் சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வாரமும் அதே போன்ற ஒரு டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்ருதி மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் இரு தரப்பினர் திருமணம் நடத்தி வைக்கும் காட்சியும் வருகிறது.
சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஸ்ருதி மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் திருமணம் நடப்பது போன்றும், மணமக்களுக்கு மற்ற போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளன. டாஸ்க்கிற்காக திருமணம் செய்து கொண்டிருக்கும் நிரூப் மற்றும் ஸ்ருதி உண்மையாகவே இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #NowStreaming only on @disneyplusHSTam #disneyplushotstar pic.twitter.com/9DaGl0E7OK
— Vijay Television (@vijaytelevision) March 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments