பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடரும் அழகான நட்பு..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆறு சீசன்களாக ஒளிபரப்பாகி உள்ளது என்பதும் இந்த ஆறு சீசன்களின் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்து தங்களது நட்பை தொடர்ந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ரக்சிதா மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் பிக்பாஸ் முடிந்து சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் நெருக்கமான நட்பில் உள்ளனர் என்பதும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டு வெளியே சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிக்பாஸ் ஷிவின் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் சமீபத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். இது குறித்த வீடியோவை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு கேப்ஷனாக ஷிவின் கூறியதாவது:

என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு போவோம்
இந்த நொடி போதும், வா மேலே மேலே போவோம்

என்ற சூர்யா நடித்த ’அயன்’ படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது