பிக்பாஸ் ஷிவானியின் வேற லெவல் குத்தாட்டம்: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி அந்த நிகழ்ச்சியில் யாருடனும் ஒட்டாமல், பேசாமல் இருந்ததாகவும் பாலாஜியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்ததாகவும் ரசிகர்களால் குற்றம்சாட்டப்பட்டர். கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் அந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்து இருந்தார் என்பதும் கடைசியாக கொடுத்த டாஸ்க்கை சிறப்பாக செய்து சிங்கப்பெண் என்ற பெயரைப் பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானிக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேற லெவலில் வைரலாகும் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குத்தாட்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசுபாண்டியன் உள்பட சுமார் ஒரு லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.