ஷிவானி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்!

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் என்பதும் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவிட்டூகள் குவியும் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே அவரது புகழ் இமேஜ் டோட்டலாக கிண்டலாகவும் கேலியகவும் மாறியது. இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் திறமையாக விளையாடி ’சிங்கப்பெண்’ என்ற நல்ல பெயருடன் தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் வழக்கம்போல் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லை இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிவானியின் இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம்? பிக் பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின்னர் அவர் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.