close
Choose your channels

பிக்பாஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ: ஷிவானியின் வைரல் வீடியோ!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாளர்களுக்கு காத்திருக்கிறது என பிக்பாஸ் ஷிவானி கூறியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

100 நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. அந்த நிகழ்ச்சியின் அனுபவம் குறித்து பேச வேண்டும் என்றால் முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். முதல் நாள் அன்றைக்கு இருந்த ஆச்சரியம், அங்கு நடந்த அனுபவங்களை விவரிக்கவே முடியாது. யாரென்றே தெரியாத நபர்களுடன் எப்படி அத்தனை நாள் கழிக்கப் போகிறோம்? என்பது குறித்து ஒரே அச்சமாக இருந்தது. உள்ளே போய் எல்லாம் செட்டாக வரைக்கும் அதே தான் யோசித்துக் கொண்டிருப்போம்.

பிக்பாஸ் போன்று மீண்டும் ஒரு த்ரில்லிங் அனுபவம் தற்போது பார்வையாளர்களுக்கு கிடைக்கப்போகிறது. காஜல் அகர்வால் நடித்த ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற திரைப்படத்தில் அதே போன்ற அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு கிடைக்கும். வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று ஷிவானி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’லைவ் டெலிகாஸ்ட்’ படத்திற்கு புரமோஷன் ஆக இந்த வீடியோவை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு செய்ததை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவை 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment