பிக்பாஸ் ஷிவானி பிறந்த நாள் விழா: ஸ்டைலாக வந்திருந்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவுக்கு பாலாஜி முருகதாஸ் ஸ்டைலாக வருகை தந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பாலாஜி மற்றும் ஷிவானிக்கு காதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஷிவானியின் அம்மா எண்ட்ரியாகி ஷிவானிக்கு டோஸ் கொடுத்ததை அடுத்து பாலாஜி மற்றும் ஷிவானி இடையிலான காதல் முறிந்துவிட்டதாக கூறப்பட்டது .

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவ்வப்போது பாலாஜி மற்றும் ஷிவானி சந்தித்து கொண்டனர் என்பதும் பாலாஜியின் பிறந்தநாளுக்கு ஷிவானியும், ஷிவானியின் நாய்க்குட்டி பிறந்தநாளுக்கு பாலாஜியும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின. மேலும் ஷிவானியின் அம்மாவிடமும் பாலாஜி சமாதானம் ஆகி விட்டதை நிரூபிக்கும் வகையில் ஒரு சில புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று ஷிவானி 22வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், அபினய் உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர். அதில் குறிப்பாக பாலாஜி மிகவும் ஸ்டைலாக கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன .